“இந்தியா”வையே எதிர்க்க துணிந்த அசாம் முதலமைச்சர்.. ஆங்கிலேயரிடம் கடன் வாங்கிய பெயர் என பகீர்

கவுஹாத்தி: இந்தியா காலனி மரபிடம் இருந்து கடன் வாங்கிய பெயர் என்றும், பாரதமே வெற்றி பெறும் எனவும் பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக நேற்றும் நேற்று முந்தினமும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பாட்னாவில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற 2 வது கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 24 கட்சிகள் கலந்துகொண்டன.

இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றை நோக்கத்துக்காக ஒருங்கிணைந்து போட்டியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டணியின் பெயர் இந்தியா என்று பெயரிடப்பட்டு உள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரிவாக்கத்துடன் முன்மொழிந்த இந்த பெயர் சிறிய திருத்தத்துடன் ராகுல் காந்தி உள்ளிட்ட மற்ற தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.

Indian National Developmental Inclusive Alliance, அதாவது. இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடகிய கூட்டணி என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயரை அறிவித்த உடனே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக மக்கள் மத்தியில் இந்த பெயர் வேகமாக சென்றடைந்து இருக்கிறது.

முக்கிய ஊடகங்களிலும் இந்தியா VS NDA என்று தலைப்பிட்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்தியாவுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது என்பதை போன்ற பேச்சுக்கள் எழத்தொடங்கின. மறுபக்கம் நேற்று தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடங்கியது.

அதிமுக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) என 39 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தங்களின் NDA கூட்டணிக்கு புதிய விளக்கத்தை அளித்தார். என்.டி.ஏ. என்றால் இனி NEW INDIA (புதிய இந்தியா), DEVELOPED NATION (வளர்ந்த நாடு), ASPIRATIONS OF PEOPLE (மக்கள் மற்றும் பிராந்திய விருப்பம்).” என அவர் விளக்கமளித்து இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்து டிரெண்ட் ஆன நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு போட்டியாக NATIONAL DEMOCRATIC ALLIANCE (NDA) என்ற கூட்டணியின் பெயருக்கு புதிய விரிவாக்கத்தை கொடுத்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.

மறுபக்கம் பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவோ, இந்தியா என்ற பெயரையே தனது ட்விட்டர் பயோவில் இருந்து நீக்கி பாரத் என்று மாற்றினார். இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், “பாரத் குறித்து நான் ஒரு ட்வீட் வெளியிட்டன. ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, ட்ஜிட்டல் இந்தியாவை காங்கிரஸ் நினைவூட்டியது.

அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயரான இந்தியா, காலனித்துவ மரபில் இருந்து கடன் வாங்கப்பட்டு அதேபோன்ற பல மரபுகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பாரதத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நாகரீக மோதல் என்பது பெயர்களை கடந்து ஆழமானது. பாரதம் வெல்ல வேண்டும். பாரதம் வெல்லும்.” என்று சர்ச்சை கருத்தை குறிப்பிட்டு உள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.