கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கோட்டயம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. கேரள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கொண்டு செல்லப்படும் அவரது உடலைக் காண வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து அஞ்சலி செலுத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த இறுதி ஊர்வலம் இரவு 10 மணி ஆகியும் சுமார் 90 கி.மீ. தூரம் மட்டுமே பயணம் செய்துள்ளது. […]
