தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? அண்ணாமலைக்கு ஆஃப்ரா, ஆப்பா? டெல்லி எடுக்கும் முடிவு!

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பிறகு கட்சி மீது மக்களின் கவனத்தையும், மீடியாவின் கவனத்தையும் திருப்ப அதிரடியாக சில முயற்சிகளில் ஈடுபட்டார். இதனால் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டார். அண்ணாமலையின் வரவுக்குப் பின்னர் கட்சிக்குள் புதியவர்கள் பலர் வந்தனர். அதேசமயம் சீனியர்கள் பலர் அதிருப்திக்குள்ளாகினர். இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்றப்போவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அண்ணாமலையோ தன்னை நோக்கி மக்களின் கவனத்தை திருப்ப முதல்வர் ஸ்டாலின், ஜெயலலிதா, செந்தில் பாலாஜி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என ஒவ்வொரு சமயத்திலும் யாரை பற்றியாவது விமர்சித்து பேசி வந்தார். சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பற்றிகூட விமர்சனத்தை முன்வைத்தார்.

கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அக்கட்சியினர் கொதித்தெழுந்தனர். தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் கூட்டணி அமைப்போம் என்று அவர் பேசிவந்த நிலையில் அதிமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் டெல்லி தலைமையோ அதிமுக உடனான கூட்டணியை தொடர்வதில் ஆர்வம் காட்டுகிறது.

தேர்தல் வரை கூட எதிர்க்கட்சி கூட்டணி நிலைக்காது

தேர்தல் பணிகள் தொடங்கிய பின்னர் தொடர்ந்து அதிமுகவுடன் பயணிக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட முடியாது. அதற்கு அண்ணாமலை சரிப்பட மாட்டார். எனவே மக்களவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழக பாஜகவுக்கு வேறு தலைவரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள் டெல்லி புள்ளிகள். அதே சமயம் திட்டமிட்டபடி அண்ணாமலையின் பாத யாத்திரை தொடங்கி நடைபெறும் என்கிறார்கள்.

அண்ணாமலையை ராஜ்ஜிய சபா எம்பியாக்கி அமைச்சரவையில் இடம் கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

“டெல்லி என்ன முடிவெடுத்தாலும் அது தனக்கு சாதகமாகவே இருக்கும் என்று அண்ணாமலை தரப்பு கருதுகிறது. ஒருவேளை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினால் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்றாகிவிடும். அதை தவிர்க்க இப்படி ஒரு ஆஃபர் வந்தால் நல்லது தான் என்று நினைக்கிறது. தலைவர் பதவியில் இருந்து அவரை தூக்கினால் தொண்டர்கள் மத்தியில் தம் மேல் அனுதாபம் உருவாகும் என்றும் நினைக்கிறார்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.