கான்பூர்: ஆட்டுத்தலையை திருகுவது போல திருகி கொன்றிருக்கிறார்கள் அந்த பெண்ணை.. இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.. என்ன நடந்தது?
உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.. பிஞ்சு குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இளம்பெண்கள் மீது பாலியல் வக்கிரங்களும் அதிகரித்து வருகின்றன.
அதேபோல, குடும்ப வன்முறைகளும் பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் கொடுமை என்னவென்றால், பெண்களுக்கு பெண்களே எதிரியாகிவிடுவதுதான்.
ஆண் வாரிசு பெற்று தராத மருமகள்கள் ஏராளமானோர் மாமியார்களின் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் இந்தியாவில் பாகுபாடே கிடையாது. வரதட்சணையாலும், ஆண் குழந்தை மீதான மோகத்தினாலும், இளம் மருமகள்கள், புகுந்த வீட்டில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
மாமனார்: ஆனால், சிலசமயம், மருமகள்களே, கொடூர செயல்களில் ஈடுபட்டுவிடுவதும் உண்டு.. கடந்த வாரம், ஒரு மருமகள் தன்னுடைய மாமனாரை கட்டையால் அடித்து உதைத்து தாக்கினாராம்.. இதோ இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது பாருங்கள். பிஜ்னூர் மாவட்டம் ஹல்டவுர் அடுத்துள்ளது காரி என்ற கிராமம்.
இங்கு வசித்து வரும் பெண்ணின் பெயர் ஜரீனா காதுன்.. 55 வயதாகிறது.. இவர் நேற்று திடீரென இறந்துவிட்டார். வீட்டிற்குள்ளிருந்து அழுகிய நாற்றம் வரவும், அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து வீட்டை உடைத்து பார்த்துள்ளனர்.. அப்போது, ஜரீனாவின் சடலம் அழுகிய நிலையில் கிடந்திருக்கிறது.. போலீசார் ஜரீனாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பக்கவாதம்: இதுகுறித்து போலீஸ் எஸ்பி நீரஜ்குமார் சொல்லும்போது, “ஜரீனாவுக்கு 3 மகன்கள் இருக்கிறார்கள்.. இதில் ஒருவரது பெயர் முகமது ஹனிப்.. பக்கவாத நோயால் இவர் பாதிக்கப்பட்டவர்..
இவர் மனைவி பெயர் கம்ருனிசா.. 28 வயதாகிறது.. இவருக்கு ஒரு கள்ளக்காதலன்.. அவரது பெயர் ஜாஹித் அகமது.. 30 வயதாகிறது.. கணவனுக்கு பக்கவாதம் என்றதுமே, கள்ளக்காதலனை 3 வருடங்களுக்கு முன்பு ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.
மாமியார்: இந்த விஷயம், மாமியார் ஜரீனாவுக்கு தெரியவந்தது… இதனால் அதிர்ந்து போன ஜரீனா, என்ன செய்வதென்றே தெரியாமல், தன்னுடைய உறவினர்களிடம் சொல்லி கண்ணீர் விட்டுள்ளார். தன் கள்ளக்காதலை, வீட்டில் எல்லாரிடமும் சொல்லிவிட்டதால், மாமியார் மீது ஆத்திரம் அடைந்தார் மருமகள் கம்ருனிசா.. உடனே, காதலன் அகமதுவுடன் சேர்ந்து, மாமியாரை கொல்ல முடிவு செய்தார்.. இதற்காக நாள் குறிக்கப்பட்டது.
அதன்படி, சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஜோடி, வீட்டிற்குள் நுழைந்து, ஜரீனாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.. மருமகள் உடலை பிடித்துக்கொள்ள, ஜரீனாவின் துப்பட்டாவாலேயே கழுத்தை காதலன் முறித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்துவிட்டார் ஜரீனா.. இதனிடையே, ஜரீனாவின் இன்னொரு மகன் யூனுஸ், தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து கொண்டேயிருந்தார்.. ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால், பதற்றமடைந்த அவர், பக்கத்து வீட்டாரிடம் விசாரிக்க சொன்னார்.
சிறையில் ஜோடி: அவர்கள் அந்த வீட்டை பார்த்தபோது, வீடு வெளியே பூட்டப்பட்டிருந்தது. அத்துடன், வீட்டிற்குள்ளிருந்து துர்நாற்றம் வரவும்தான், போலீசுக்கு தகவல் தந்தள்ளனர்.. போலீசார் வந்து சடலத்தை மீட்பதற்குள், கள்ளக்காதல் ஜோடி எஸ்கேப் ஆகியிருந்தது.. இதையடுத்து தீவிர வேட்டைக்கு பிறகு இருவரும் கைதாகி உள்ளனர்.. ஜரீனாவின் செல்போன், வீட்டு சாவி, கொலைக்கு பயன்படுத்திய துப்பட்டா ஆகியவற்றை மீட்டு விசாரித்து வருகிறோம் என்றனர் போலீசார்.