HUKUM பாடலில் இடம்பெற்ற அந்த ஒரு வரி..மோதலில் இறங்கிய ரசிகர்கள்..இனி பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது..!

​எதிர்பார்ப்பில் ஜெயிலர்ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டபோது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது படத்திற்கு பலமடங்கு எதிர்பார்ப்பு உயர்ந்துள்ளது. ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்ஸ் மற்றும் கிலிம்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக ஈர்க்க மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உயர காரணமாக அமைந்தது. மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் இணைந்ததற்கு பிறகு ஜெயிலர் பான் இந்திய படமாக உருவெடுத்தது

​நம்பிக்கைஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் இறுதியில் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஜெயிலர் படத்தை பார்த்த ரஜினிக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாம். கண்டிப்பாக இப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருப்பதாக தகவல்கள் வருகின்றன

​ஹுக்கும்ஜெயிலர் படத்தில் இருந்து முதலில் காவாலா என்ற பாடல் வெளியானது. தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியான இப்பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ஆனால் காவாலா ரஜினியின் பாடலாக இல்லாமல் தமன்னாவின் பாடலாக இருந்தது தான் அவர்களுக்கு சற்று வருத்தமாக இருந்தது. இந்நிலையில் அந்த வருத்தத்தை போக்கும் வகையில் தற்போது ஹுக்கும் என்ற செம மாஸான பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்து விஷயமும் இப்பாடலில் இருப்பதாக அவர்களே கூறி வருகின்றனர். இந்நிலையில் காவாலா பாடலே யூடியூபில் பல சாதனைகள் செய்து வரும் நிலையில் தற்போது ஹுக்கும் பாடலும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

​மோதல்ஹுக்கும் பாடல் வெளியாகி ஒருபக்கம் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் மறுபக்கம் சர்ச்சைகளையும், சண்டைகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முழு காரணம் இப்பாடலின் வரிகள் தான். ஹுக்கும் பாடலில், பட்டத்தை பறிக்க நூறு பெரு என இடம்பெற்ற வரி தான் இந்த சலசலப்பிற்கு காரணமாக அமைந்தது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது. தளபதி விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பேச்சு போய்க்கொண்டிருக்க இந்நிலையில் ஹுக்கும் பாடலில் இடம்பெற்ற இந்த வரி ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே மோதலை ஏற்படுத்தியள்ளது. இருந்தாலும் இப்பாடல் மறுபக்கம் யூடியூபில் பல சாதனைகளை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.