திருவனந்தபுரம்: மலையாள நடிகை ஹனி ரோஸ் லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கருப்பு நிற டாப்ஸ் மற்றும் சிகப்பு நிற பிளேஸர் அணிந்து கொண்டு பக்கா மாஸாக நடந்து செல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்து வரும் ஹனி ரோஸ் தனது பிரம்மாண்ட பேரழகை வைத்தே ஏகப்பட்ட ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான ஹனி ரோஸின் பான் இந்தியா படமான ரேச்சல் ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால் முதல் பாலய்யா வரை: மலையாள நடிகையான ஹனி ரோஸ் மோகன்லாலின் பிக் பிரதர், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் ஜெய், சுந்தர். சி நடித்த பட்டாம்பூச்சி படத்திலும் நடித்திருந்தார்.
இந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான பாலய்யாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஹனி ரோஸ் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கிளாமர் தூக்கலாக போட்டோக்களையும் வெளிநாடுகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வரும் நிகழ்ச்சி வீடியோக்களையும், கடை திறப்பு விழா வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக: இயக்குநர் ஆனந்தினி பாலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக உள்ள ரேச்சல் படத்தில் அடுத்ததாக ஹனி ரோஸ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை ஹனி ரோஸ் கையில் கத்தியுடன் ஆக்ரோஷமாக கறி வெட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மாட்டுக்கறியை அவர் வெட்டுகிறாரா? அல்லது வில்லனை பழிவாங்கி விட்டு அவரை வெட்டுகிறாரா? என ஏகப்பட்ட கேள்விகளும் கிளம்பி உள்ளன.
கோட் சூட்டில் கெத்தாக: இந்நிலையில், தற்போது சிகப்பு நிற கோட் சூட் உடையில் செம கெத்தாக நடந்து செல்லும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார் நடிகை ஹனி ரோஸ்.
டைட்டான உடையில் திக்குமுக்காட வைக்கிறீங்களே என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.