இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைத்த அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தையொட்டி, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 105 பழங்கால பொருட்கள் மற்றும் சிற்பங்களை திருப்பித் தர அமெரிக்கா முடிவு செய்தது.

இதையடுத்து நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் 105 பழங்கால பொருட்களை தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதற்கு பிரதமர் மோடிநேற்று வெளியிட்ட பதிவில், “இதுஒவ்வொரு இந்தியனையும் மகிழ்விக்கும். இதற்காக அமெரிக்காவுக்கு நன்றி. இந்த விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள், மகத்தான கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தவை. நமது பாரம்பரியம் மற்றும் வளமான வரலாற்றைப் பாதுகாப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு இப்பொருட்கள் தாயகம் வருவது ஒரு சான்றாகும்” என்று குறிபிட்டுள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த 12-13-ம் நூற்றாண்டு பளிங்கு வளைவு, மத்திய இந்தியாவை சேர்ந்த 14-15-ம் நூற்றாண்டு அப்சரா, தென்னிந்தியாவை சேர்ந்த14-15-ம் நூற்றாண்டு சம்பந்தர், 17-18-ம் நூற்றாண்டு வெண்கல நடராஜர் ஆகியவை இந்த பொருட்களில் அடங்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.