சென்னை: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். அப்போது, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரி மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார். கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுத்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக வலியுறுத்தி உள்ளது. இருந்தாலும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், […]
