சென்னை: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ப்ராஜெக்ட் கே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், அப்படியே அயன்மேன் படத்தின் காப்பி என ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாளை அதிகாலை அமெரிக்காவின் காமிக் கான் நிகழ்ச்சியில் இந்த படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிடுகிறது. அதற்காக கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்கள் அமெரிக்கா சென்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
அதிகாலை வரை விழித்திருந்து பிரபாஸின் ப்ராஜெக்ட் கேவுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டுமே என நினைத்து புலம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு படத்தின் டைட்டில் இதுதான் என இணையத்தில் அந்த டைட்டில் என்கிற பெயரில் ஒரு அட்டகாசமான டைட்டில் கசிந்துள்ளது.
அடுத்த ஆதிபுருஷா ஆகாம இருந்தால் சரி: நடிகர் பிரபாஸ் தொடர்ந்து 500 கோடி பட்ஜெட்டில் ட்ரோல் செய்யவே படங்களை வெளியிடுவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு ஏன் திரிகிறார் என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்கள் ப்ராஜெக்ட் கே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் குவிந்தன.
முன்னதாக வெளியான தீபிகா படுகோன் ஃபர்ஸ்ட் லுக்கும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என விமர்சிக்கப்பட்ட நிலையில், பிரபாஸ் முகத்தைக் காட்டாமல் கையை காட்டிய போஸ்டரே மெர்சலாக இருந்தது என்றும் ஃபேன் மேடு போஸ்டர்களே பெட்டர் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

மெர்சல் காட்டும் ஃபேன் மேட் போஸ்டர்: ப்ராஜெக்ட் கே படத்தின் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இது என்ன பிரமாதம், நாங்க ரெடி பண்ணி விடுறோம் பாரு என ரசிகர்கள் வெளியிட்ட ஃபேன் மேடு போஸ்டர்கள் எல்லாம் வேறலெவல் மாஸாக உள்ளது.
காமிக் கானில் வெளியிடுகிறோம், நல்லா இல்லைன்னாலும் நல்லா இருக்குன்னு தான் சொல்லணும் என்கிற ரீதியில் பிரம்மாண்ட ப்ரமோஷனில் ப்ராஜெக்ட் கே படக்குழு இறங்கி உள்ளது.
ப்ராஜெக்ட் கே டைட்டில் கசிந்ததா?: Project K என்கிற அறிமுக டைட்டிலுடன் படத்தை துவங்கிய படக்குழு அந்த K என்றால் என்ன அர்த்தம் என்பதை நாளை அதிகாலை இந்திய நேரப்படி 2 முதல் 3 மணி அளவில் வெளியிட உள்ளனர்.

K என்றால் கல்கியா என்கிற ஒரு கெஸ் ஓடிக்கொண்டிருந்த நிலையில், படம் தொடங்கும் போதே இந்த படம் டைம் மெஷின் சம்பந்தமான படம் என்றும் சொல்லப்பட்டது. மேலும், ஒரு பெரிய டயரை படக்குழு உருவாக்கிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், தற்போது கசிந்துள்ள டைட்டில் என்னவென்றால் காலச்சக்ரா என்பது தான் அந்த Kவுக்கான அர்த்தம் என்றும் பிரபாஸ் இந்த படத்தில் டைம் மெஷின் மூலமாக உலகுக்கு வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறார் எனக் கூறுகின்றனர்.
இதுதான் ஒரிஜினல் டைட்டிலா? அல்லது உண்மையான டைட்டில் என்ன என்பது நாளை காலை தெரிந்து விடும். காலசக்ரா டைட்டிலே நல்லாத்தான் இருக்கு, நிச்சயம் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் என பிரபாஸ் ரசிகர்கள் அந்த டைட்டிலுடன் லீக்கான போஸ்டரை டிரெண்ட் செய்து வருகின்றனர்.