சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y27 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ Y27 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.64 இன்ச் ஃபுள் ஹெச்.டி+ டிஸ்ப்ளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 5,000mAh பேட்டரி
- 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி
- 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் கேமரா பின்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- டைப் சி சார்ஜிங் போர்ட்
- 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் திறன்
- இந்த போனின் விலை ரூ.14,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது
Amp up your style game! Presenting the all-new #vivoY27.
Know more : https://t.co/R2jZHfYZtm
#vivoYSeries pic.twitter.com/xQtZKWPCqU
— vivo India (@Vivo_India) July 20, 2023