நாமக்கல் வரும் நவம்பர் 1 ஆம் தேதி அன்று நாமக்கல் ஆஞ்சனேயர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. நாமக்கல்லில் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சனேயர் அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் இங்குள்ள நரசிம்மர் கோவிலின் உபகோவில் ஆகும். உலகப் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு நாடெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியைத் தரிசனம் செய்கின்றனர். நரசிம்மர் கோவில் மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள குடவறைக் […]