பெங்களூரு பிவிஆர் மால்… ஒரே இடத்தில் 12 ஸ்கிரீன்… தென்னிந்தியாவில் இதுதான் முதல்முறை!

பெங்களூரு என்றாலே ஐடி நகரம் என்பது தான் முதலில் தோன்றும். இங்கு தொழில் நிறுவனங்களுக்கு எப்படி பஞ்சமில்லையோ, அதுபோல் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை. மேலும் புதிய வசதிகள் வரிசை கட்டி வருவதற்கு தயாராகி கொண்டிருக்கின்றன. அதில் சமீபத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள விஷயம் 12 ஸ்கிரீன்கள் கொண்ட பிவிஆர் மால்.

கோவை பிராட்வே மால்5 ஸ்கிரீன், 6 ஸ்க்ரீன் கொண்ட தியேட்டரை பார்த்திருப்போம். 10க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் என்பது நமக்கு புதிது தான். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் தென்னிந்தியாவில் இதுதான் முதல்முறை எனக் கூறுகின்றனர். சமீபத்தில் தான் கோவை பிராட்வே மாலில் லேசர் மற்றும் EPIQ தொழில்நுட்பத்துடன் கூடிய ஐமேக்ஸ் திரையரங்கம் திறக்கப்பட்டு தென்னிந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட் என்ற பெருமையை பெற்றது.பிவிஆர் மால் சூப்பர்பிளக்ஸ்இதற்கு போட்டியாக மற்றொரு விஷயம் பெங்களூருவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதலில் இது எங்கிருக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம். தெற்கு பெங்களூருவில் கனகபுரா ரோட்டில் உள்ள கோனானகுண்டே கிராஸில் இருக்கும் போரூம் மாலில் அமைந்துள்ளது. இங்குள்ள பிவிஆர் சினிமாஸில் மொத்தம் 12 ஸ்கிரீன்கள் இருக்கின்றன. இதனால் சூப்பர்பிளக்ஸ் (Superplex) என்று அழைக்கின்றனர்.
பெங்களூரு மக்கள் குஷிஇதில் 3 ஸ்கிரீன்கள் LUX, 4DX, லேசர் உடன் கூடிய PXL தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன. இது கடந்த வியாழன் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. குறிப்பாக Ice format எனப்படும் பிரெஞ்ச் நாட்டு தொழில்நுட்ப வசதி உடன் கூடிய திரை அனுபவம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து 14 ஸ்கிரீன்கள்இதன்மூலம் திரையில் தோன்றும் காட்சியின் பிரதிபலிப்புகளை பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகள் மூலம் பார்க்க முடியும். இது மெய்சிலிர்க்கும் வகையிலான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக 14 திரைகள் கொண்ட மெகா பிவிஆர் திரையரங்கம் பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வரவுள்ளது என்று பிவிஆர் ஐநாக்ஸ் மேலாண் இயக்குநர் அஜய் பிஜிலி தெரிவித்துள்ளார்.
​ஃபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியாஇதற்கு ஃபீனிக்ஸ் மால் ஆஃப் ஆசியா எனப் பெயர் வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த இடத்தில் பிவிஆர் சினிமாஸ் பற்றி சில விஷயங்களை பார்க்கலாம். தென்னிந்தியாவில் 500 ஸ்கிரீன்கள் உடன் மிகப்பெரிய செயின் பொழுதுபோக்கு நிறுவனமாக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.
​தென்னிந்தியாவில் எழுச்சிகொரோனாவிற்கு பின்னர் தென்னிந்தியாவில் தான் 90 சதவீத அளவிற்கு வர்த்தக ரீதியாக முன்னேற்றம் கண்டு வந்துள்ளது. அதுவே இந்தியாவின் மத்திய, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 60 சதவீதம் மட்டுமே மீண்டு வந்திருக்கிறது. இதனால் தென்னிந்திய நகரங்களில் புதிய ஸ்கிரீன்களை அறிமுகம் செய்த வண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.