நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகவுள்ள படம் ஜெயிலர்
இப்படத்தில் மோகன் லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தில் இருந்து `காவாலா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்பாடல் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட் அடித்திருக்கிறது. இதில் தமன்னாவின் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ரசிகர்கள் தமன்னாவின் நடனத்தை வேறு பல பாடல்களுடன் சிங்க் செய்தும், நடனமாடியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்களை நடிகை தமன்னாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி வருகிறார். இந்நிலையில் இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ‘காவாலா’ பாடலுக்கு நீங்கள் கொடுத்த அந்த அன்பு எனது மனதை நிறைத்துள்ளது. என் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இது.
Incredibly touched & overwhelmed for the love Kaavaalaa has received. It is truly an unparalleled sense of validation for the work I do in the movies. I can’t express enough how much your love & support mean to me. So thank you from the bottom of my heart. I love you all
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) July 21, 2023
உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை விவரிக்க முடியாது. இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.