Vijay: சக்சஸ்: அரசியலுக்கு வரும் விஜய்யை தேடி வந்த குட் நியூஸ்

Vijay Makkal Iyakkam: தளபதி விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிய வந்திருக்கிறது.

​விஜய்​சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கிறார். ஆழம் பார்த்தது போதும், களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என முடிவு செய்திருக்கிறாராம். வரும் செப்டம்பர் மாதம் அரசியல் கட்சியை துவங்கப் போகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்டா பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.நயன்தாரா​நயன்தாரா எனக்கு பெரிய முன் உதாரணம்​​கருத்துக்கணிப்பு​விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பீர்களா என டெல்டா பகுதி மக்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தினர் கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார்கள். கண்டிப்பாக ஆதரிப்போம் என மக்கள் தெரிவித்துள்ளார்களாம். இந்த முடிவு விஜய் மக்கள் இயக்கத்தினரையும், தளபதியையும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறதாம்.
​கல்வி விருது விழா​முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை அழைத்து கவுரவித்தார் விஜய். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களோ, நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அரசியலுக்கு வரும் ஐடியாவில் தான் விஜய் அந்த கல்வி விருது விழாவை நடத்தியதாக பேசப்பட்டது. அதை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் மேடையிலேயே தெரிவித்தார்.
​இரவு பாடசாலை​காமராஜரின் பிறந்தநாள் அன்று இரவு நேர பாடசாலையை துவங்கியிருக்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர். அந்த பாடசாலையில் மாணவர்கள் படித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. மேலும் லியோ படத்தில் வரும் நா ரெடி, வெறும் பாடல் அல்ல விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் அறிவிப்பு ஆகும் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
​பிரேக் எடுக்கும் விஜய்?​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். அந்த படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. லியோவை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார். அந்த படத்துடன் நடிப்பில் இருந்து குட்டி பிரேக் எடுத்து அரசியல் வேலை செய்யப் போகிறார் என்று பேச்சு கிளம்பியது. அந்த தகவலில் உண்மை இல்லை என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த பேச்சு அடங்கியபாடில்லை.

​Vijay: மக்கள் சேவை செய்ய நடிப்புக்கு முழுக்கு போடுவதில் சீரியஸாக இருக்கும் விஜய்

​சந்திப்பு​தளபதிவிஜய்யின் சூப்பர் சைட் பிசினஸ்..பணம் கொட்டு கொட்டுனு கொட்டுது..அண்மையில் பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார் விஜய். அந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினாராம். மேலும் அரசியலுக்கு வந்துவிட்டால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என விஜய் கூறியதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள். விஜய் அரசியலுக்கு வந்தால் அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவு தங்களுக்கு தான் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

​விஜய் உத்தரவு​சமூக வலைதளத்தில் அஜித் குமாரை இனி யாரும் சீண்டக் கூடாது என்று தன் சோஷியல் மீடியா டீமிடம் விஜய் தெரிவித்துள்ளாராம். மேலும் ரஜினியை விட தான் பெரிய ஆள் என்கிற பிம்பத்தை உருவாக்குமாறு விஜய் கூறியதாக தகவல் வெளியானது. இளைஞர்களிடம் தன் பெயர் பெரிய அளவில் ரீச்சாக வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறாராம் விஜய்.

​Vijay: அஜித் விஷயத்தில் நிறுத்துங்க, ரஜினி விஷயத்தில் இதை செய்ங்க: ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.