மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யணுமா? மின்சார வாரியம் செம திட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கு சிறப்பு பெயர் மாற்றம் முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தினார்.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென “சிறப்பு பெயர் மாற்றம் முகாம்” ஜூலை 24ஆம் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து அலுவலுக வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை செயல்படும்.

புகைப்பட கண்காட்சி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள வீட்டு மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் பெறுவதற்கு தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான ரூ. 726/- (ரூ 615+GST ரூ 111) செலுத்தி பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.