
‛டன்ங்கி' படத்திற்காக ஷாருக்கானின் புதிய லுக்கா?
பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். பதான் படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து ஜவான், டன்ங்கி படங்களில் நடித்து வருகிறார் ஷாருக்கான்.
இந்த நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் ஷாருக்கான் ‛டன்ங்கி' படத்தில் சிங் தோற்றத்தில் நடிப்பதாக அந்த போட்டோ வைரலானது. ஆனால், இந்த போட்டோ சுமார் 11 வருடங்களுக்கு முன்பு ஷாருக்கான் ஒரு தனியார் விளம்பரத்திற்காக நடித்தபோது எடுத்த போட்டோ என்று பின்னர் தெரிய வந்தது.