சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் ஆக மாறியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாவீரன் படம் ஜூலை 14 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் மாவீரன்: மாவீரன் படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக பழம்பெரும் நடிகை சரிதா நீண்ட நாட்களுக்கு பின் திரையில் தோன்றி உள்ளார். வில்லனாக இயக்குநர் மிஸ்கின் நடித்துள்ளார். இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
மாவீரன் வசூல்: மாவீரன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் படத்தின் முன்பதிவு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இருப்பினும் மாவீரன் படத்திற்கு வந்த பாசிடிவ் விமர்சனங்களால் திரையரங்கிற்கு கூட்டம் அலைமோதியது. சிவகார்த்திகேயனின் நடிப்பும்,யோகி பாபுவின் காமெடியும் படத்திற்கு பிளஸாக அமைந்தது. இப்படம் வெளியான முதல் நாளில் கிட்டத்தட்ட 7 கோடி வரை வசூலித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூலை அதிகரித்து.
SK to Sathya: இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாவீரன் திரைப்படத்திற்கு மேக்கப் போட்டு ரெடியான வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் SK to Sathya என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது.