நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா விஜயகுமார்
இயக்கம்: வசந்தபாலன்
இசை: ஜிவி பிரகாஷ்
வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸின் அட்டகாசமான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் அநீதி.
வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் மாறுபட்ட திரைப்படங்களை கொடுத்த வசந்த பாலன் மற்றொரு வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
வசந்த பாலனின் அநீதி: வசந்த பாலன் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் தான் அநீதி. இந்த படத்தின் கதை என்னவென்றால், முதலாளி வர்க்கத்தினர் தொழிலாளிகளை ஒரு திருடனைப் போல நடத்துகிறார்கள். அப்படி முதலாளியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்த திருமேனி (அர்ஜூன் தாஸ்) வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பது தான் அநீதி திரைப்படத்தின் கதை.
கொலைப்பழி: உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அர்ஜூன் தாஸ். பணக்கார வீட்டில் வேலைபார்க்கும் சுப்புலட்சுமியினை (துஷா விஜயன்) காதலிக்கிறார். அதுவரை விரக்தியான வாழ்க்கையில் இருந்த அர்ஜூன் தாஸின் வாழ்க்கையில் வசந்தம் வீசுகிறது. இந்த நேரத்தில், சுப்புலட்சுமியின் முதலாளியம்மா இறந்து விட, அந்த கொலைப்பழி சுப்புலட்சுமி மற்றும் திருமேனியின் மீது விழுகிறது. இந்தக் கொலைப்பழியிலிருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பிளஸ்: அநீதி படத்தின் மொத்த கதையையும் அர்ஜூன் தாஸ் தனது தோளி சுமந்து திருமேனி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.வில்லன் கதாபாத்திரத்துக்குள் சுருக்கப்பட்டிருந்த ஒருவரை இயக்குநர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். துஷா விஜயன், வனிதா விஜயகுமார், காளி வெங்கட் என இந்த படத்திற்கு தகுந்தபடி கதாபாத்திரத்தை தேடி தேடி தேர்வு செய்திருக்கிறார் வசந்த பாலன், இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிளஸாக அமைந்துள்ளது.
மைனஸ்: அதே போல படத்தின் முதல்பாகத்தில் விறுவிறுப்பாக கதைக்குள் செல்லாமல், ஹீரோயின் மற்றும் ஹீரோ குறித்து காட்சிகள் மட்டுமே இருந்ததால், ஒரு நார்மல் காதல் கதையோ என்ற எண்ணம் தோன்றிவிட்டது. இது தான் படத்தின் சின்ன மைனஸ் என்று சொல்லாம். அந்த மைனசையும் இடைவேளைக்கு பின் பிளஸாக்கி விட்டார் இயக்குநர்.
எளிய மனிதர்களின் வலி: டெலிவரி பாய்ஸ்களுக்கு நடக்கும் அநீதிகளையும், எளிய மனிதர்கள் மீது சட்டங்கள் சமமாக இருந்ததா? அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட்டதா? என்பதையும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். ஒவ்வொரு எளிய மனிதர்களின் வலியை வேதனையுடன் படமாக்கும் இயக்குநர் வசந்த பாலன் இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார்.