HBD Suriya: அவமானங்கள் முதல் தேசிய விருதுகள் வரை..சூர்யாவின் திரைப்பயணம் ஒரு பார்வை..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரைபிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷலாக அவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது.

தற்போது அந்த கிலிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் சூர்யா இன்று இந்த நிலையை அடைந்துள்ளார் என்றால் அதற்கு அவரின் உழைப்பும் திறனும் தான் முழு காரணம்.

அவமானங்களும் சாதனைகளும்

நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களையும், விமர்சனங்களையும் சந்தித்த சூர்யா படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். ஒரு கார்மெண்ட் கம்பெனியில் வேலை செய்து வந்த சூர்யா திடீரென நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். தன் தந்தையின் அறிவுறுத்தலின் பெயரில் சூர்யா நேருக்கு நேர் படத்தில் நடித்தார்.

indian 2: விடுதலை வழியில் இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்தியன் 2.?ட்விஸ்ட் வைத்த ஆண்டவர்..!

ஆனால் அவருக்கு நடிப்பின் மீது முழு ஆர்வம் அப்போது இல்லை. இருந்தாலும் தன் தந்தை சிவகுமார் சொல்பேச்சை கேட்டு நடித்தார் சூர்யா. வசந்த் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சூர்யா அப்படத்தின் மூலம் பல விமர்சனங்களை சந்தித்தார். முதல் படம் என்பதால் சூர்யாவிற்கு சற்று தயக்கமும், பயமும் இருந்தது. அது திரையிலும் பிரதிபலித்தது.

இருந்தாலும் சூர்யா கடுமையாக உழைத்து அப்படத்தில் நடித்தார். இந்நிலையில் நேருக்கு நேர் வெளியான முதல் நாள் முதல் ஷோவை காண திரையரங்கிற்கு சென்றுள்ளார் சூர்யா. அப்போது படம் பார்த்துவிட்டு ஒரு ரசிகர் சூர்யாவிடம் வந்து, தலைவா செமையா சொதப்பிட்ட, இனி நடிக்காத என பேசிவிட்டு சென்றார்.

சூர்யாவின் திரைப்பயணம்

இதைக்கேட்ட சூர்யா அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சூர்யாவை அவரது தந்தை சிவகுமார் தான் சமாதானம் செய்து மீண்டும் நடிக்க சொன்னார். சூர்யாவும் தொடர்ந்து போராடி பல படங்களில் நடித்து வந்தார். இறுதியாக ஐந்து வருட கடுமையான போராட்டத்திற்கு பிறகு சூர்யாவிற்கு நந்தா என்ற படத்தின் மூலம் முதல் வெற்றி கிடைத்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதன் பிறகு சூர்யா தன் திரைப்பயணத்தில் திரும்பிப்பார்க்கவில்லை. சமீபத்தில் கூட சூரரைப்போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் சூர்யா. இந்நிலையில் பல அவமானங்களை கடந்து தன் கடின உழைப்பினால் இன்று இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு நடிகராக உயர்ந்துள்ள சூர்யாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.