Rajini: நான் சூப்பர்ஸ்டாராக இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்..ரகசியத்தை சொன்ன ரஜினி..!

தமிழ் சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தான் ரஜினி. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி பின்பு மெல்ல மெல்ல வில்லனாக உருவெடுத்து படிப்படியாக ஹீரோவாக முன்னேறினார் ரஜினி. அவர் ஹீரோவாக நடிக்க துவங்கியதில் இருந்து அவர் திரைவாழ்க்கையில் திரும்பிப்பார்க்கவே இல்லை எனலாம்.

அவர் தொட்டதெல்லாம் வெற்றிகளாக மாறின. நடித்த படங்கள் எல்லாம் வெள்ளி விழா கண்டன. சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை தன் இரண்டாவது படத்திலேயே பெற்ற ரஜினி இன்றுவரை அந்த சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை தக்கவைத்து வருகின்றார்.

வெற்றிக்கான காரணம்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் நடிப்பில் வெளியாகும் படங்கள் முன்பு போல வெற்றிகளை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வி படமாக அமைந்தன. இதன் காரணமாக ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

HBD Suriya: சூர்யா – ஜோதிகா காதலை பற்றி தெரிந்துகொண்ட ஏ.ஆர் ரஹ்மான்..என்ன பண்ணார் தெரியுமா ?

இனி ரஜினி நடிக்கமாட்டார். அப்படி நடித்தாலும் படங்கள் ஓடாது என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்வி தான் பெரும் விவாத பொருளாக மாறியது. ரஜினிக்கு வயதாகிவிட்டது, எனவே இனி அடுத்த தலைமுறைக்கான சூப்பர்ஸ்டார் யார் என்ற தேடலில் சிலர் இறங்கியது ரஜினி ரசிகர்களை சீண்டியது.

இதன் காரணமாக இணையத்தில் தொடர்ந்து மோதல்களும் வெடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். எனவே மீண்டும் தொடர் வெற்றிகளை குவித்து தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என நிரூபிக்கும் முனைப்பில் உழைத்து வருகின்றார் ரஜினி.

இதையடுத்து ரஜினியின் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாக இருக்கின்றது. இதையொட்டி இப்படத்தில் இருந்து காவாலா மற்றும் ஹுக்கும் என இரு பாடங்கள் வெளியானது. இவ்விரு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரகசியத்தை சொன்ன ரஜினி

குறிப்பாக ஹுக்கும் பாடல் வரவேற்பையும் தாண்டி சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இப்பாடலின் வரிகள் தான். சூப்பர்ஸ்டார் பட்டத்தை பற்றிய வரிகள் இப்பாடலில் இடம்பெற்றது தான் இந்த சலசலப்பிற்கு காரணம். இந்நிலையில் ரஜினி தான் ஏன் சூப்பர்ஸ்டாராக வெற்றிகரமாக இருக்கின்றேன் என்பதை பற்றி கூறியுள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அவர் கூறியதாவது, நான் வெற்றிகரமாக இன்றளவும் இருக்கின்றேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று தியானம். உடலுக்கு எப்படி உடற்பயிற்சி முக்கியமோ அதே போல மனதிற்கு தியானம் மிக முக்கியம். தினம் ஒரு அரை மணி நேரம் ஒரு இடத்தில அமர்ந்து தியானம் செய்து வந்தால் நம் மனதிற்கு அமைதி நிலவும். எனவே நாம் செய்யும் செயலில் தெளிவு ஏற்படும் என கூறினார் சூப்பர்ஸ்டார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.