வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலைகிராமத்திற்கு புதிதாக ஏற்படுத்தப்பட்ட சாலையை நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். இத்தனை ஆண்டுகாலம் தங்களது அன்றாட தேவைகளுக்காக இந்த கிராம மக்கள் மலையில் இருந்து காட்டு வழியாக பல கிலோமீட்டர் நடந்தே சென்று வந்த நிலையில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதை பெரிதும் வரவேற்றுள்ளனர். ஜவ்வாது மலையில் அமைந்துள்ள இந்த மலைகிராமத்தில் இருந்து சுமார் […]
