சென்னை: அஜித்தின் ரீல் மகள் என்று கோலிவுட்டில் அழைக்கப்பட்டு வரும் அனிகாவின் போட்டோ ஷூட், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடிகை அனிகா, அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
அதன் பின் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். பார்ப்பதற்கு ஒரு சாயலில் நயன்தாரா போல இருப்பதால் இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என செல்லமாக அழைத்து வருகின்றனர்.
நடிகை அனிகா: க்யூட்டான குட்டிபெண்ணாக சினிமாவில் நுழைந்த அனிகா புட்ட பொம்மா என்ற மலையாளப் படத்தில் நடித்தார் கப்பேலா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

முத்தக்காட்சியில் தாராளம்: ஹீரோயினாக அறிமுகமான இரண்டாவது படத்திலேயே முத்தக்காட்சியில் தயக்கமே இல்லாமல் நடித்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆனது. ஆனால், சர்ச்சை பற்றி கவலைப்படாத அனிகா, ஓ மை டார்லிங் ஒரு காதல் படம் என்பதால், முத்தக்காட்சி தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும்போதே இயக்குநர் முத்தக்காட்சி குறித்து கூறியிருந்தார். நானும் ஒகே சொல்லிவிட்டேன் என கூலாக பதிலளித்து இருந்தார்.

இதெல்லாம் நல்லதுக்கு இல்ல: தற்போது அடுத்தடுத்த படங்களை கை வசம் வைத்து இருக்கும் அனிகா, சோஷியல் ரசிகர்களையும் இழந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதால், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த தற்போது, பாவாடை மற்றும் ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டுன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலர் லைக்களை போட்டு வந்தாலும், சில ரசிகர்கள் ரொம்ப ஓவரா போறீங்க இதெல்லாம் நல்லதுக்கு இல்ல என கருத்துக்களை கூறி வருகின்றனர்.