செந்தில் பாலாஜி வழக்கு… டெல்லியில் EDக்கு டஃப் கொடுத்த கபில் சிபல்… வந்தது புதிய உத்தரவு!

தமிழகத்தில் முக்கிய அமைச்சராக விளங்கிய செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறை அடைக்கப்பட்டுள்ளார். கடந்த அ

ஆட்சியில் நடந்த பண மோசடி வழக்கு, காலை சுற்றிய பாம்பாக தொடர்ந்து வந்து திமுக ஆட்சியில் ஆட்டம் காட்டியுள்ளது. இதன் பின்னணியில் திமுகவிற்கு எதிரான டெல்லியின் அரசியல் கணக்குகளும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புழல் சிறையில் செந்தில் பாலாஜி!

செந்தில் பாலாஜி விவகாரம்

இதனால் தற்போதைக்கு வெளி வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்விற்கு பின்னர், அதிரடியாக புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் மீதான வழக்குகளை தூசு தட்டி சிறை கதவுகளை இறுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

நீதிமன்ற வழக்குகள்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டியுள்ளது. முறையீடு, மேல்முறையீடு என பரபரப்பிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த சூழலில் சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் போடப்பட்ட மேல்முறையீட்டு மனு சற்றுமுன் விசாரணைக்கு வந்தது. அதில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அனல் பறக்கும் வாதங்களை முன்வைத்து வருகிறார். அதாவது,

கபில் சிபல் வாதம்

அமலாக்கத்துறை ஒன்றும் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அவர்கள் எப்படி கைது செய்ய முடியும்.ஒரு சுங்கத்துறை அதிகாரி கடத்தலில் ஈடுபட்ட நபரை பிடித்து அவரிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்யலாம். ஆனால் அவரை கைது செய்ய காவல்துறையின் உதவியை நாட வேண்டும். அவர்கள் உதவியுடன் வாக்குமூலம் பெற்று வழக்கில் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கலாம்.இதே நடைமுறை தான் அமலாக்கத்துறைக்கும் பொருந்தும்.அமலாக்கத்துறை நேரடியாக கைது செய்து விசாரணை நடத்த முடியுமா?ஆவணங்களை கையகப்படுத்துவது, முடக்குவது தான் அமலாக்கத்துறைக்கு உள்ள அதிகாரம்.எனவே செந்தில் பாலாஜியின் கைது சட்டப்பூர்வமானது இல்லை.

இவ்வாறு வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தை முன்வைத்தார். கிட்டதட்ட இதே வாதத்தை தான் சென்னை உயர் நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி தரப்பு முன்வைத்ததை பார்க்க முடிந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில்,

நீதிபதிகள் கேள்வி

கைது செய்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பினால் அமலாக்கத்துறை எப்படி விசாரிக்க முடியும்.விசாரணை அமைப்பு எதிர்க்க முடியும். நேரடியாக கைது செய்ய முடியாது என்கிறீர்களா? என்று செந்தில் பாலாஜி தரப்பிற்கு கேள்வி

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதியின் தீர்ப்பிற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தீர்ப்பு வழங்கப்படும். இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.