Jailer: 'ஜெயிலர்' படம் குறித்து வெளியான திடீர் அறிவிப்பு : ரசிகர்கள் ஏமாற்றம்.!

ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர்’ படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. இதற்கான ரிலீஸ் பணிகளில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்திற்காக தெலுங்கானாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கோலிவுட் சினிமாவே பெரிதும் எதிர்பார்க்கும் படமாக ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கி வரவேற்பை பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இவரது இயக்கத்தில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படம் ஏகப்பட்ட ட்ரோல்களில் சிக்கியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனால் ‘ஜெயிலர்’ படத்தினை எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முடிவுடன் இயக்கியுள்ளார் நெல்சன். இந்தப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் இரண்டாம் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி டிரெண்டிங்கில் மாஸ் காட்டி வருகிறது. இன்று மூன்றாவது சிங்கிளான ஜூஜூபி என்ற பாடலும் வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

‘ஜெயிலர்’ படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட ‘காவாலா’ பாடலின் தெலுங்கு பதிப்பான ‘காவாலி’ பாடலை இன்று தெலுங்கானா சிஎம்ஆர் கல்லூரியில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சி மூலம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

Raveena Ravi: டயலாக் இல்லாத ‘மாமன்னன்’ படத்தில் நடிக்க காரணம் இதுதான்: ரவீனா ரவி.!

ஆனால் தற்போது மழை காரணமாக தெலுங்கனா சிஎம்ஆர் கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ‘காவாலி’ பாடல் இன்று நாளை 4 மணிக்கு யூடிப்பில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சினிமா பிரபலம் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் நடித்துள்ளனர். அத்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘விடுதலை 2’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகும் ‘அசுரன்’ நடிகை: வெற்றிமாறன் அதிரடி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.