தமிழில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் வினோதய சித்தம். சமுத்திரக்கனி இயக்கி நடித்த இந்தப்படத்தில் தம்பி ராமைய்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற ‘வினோதய சித்தம்’ படம் தற்போது தெலுங்கில் ‘ப்ரோ’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ரோ’ படம் வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயிருக்கிறது. அண்மையில் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியது சர்ச்சைகளை கிளப்பியது. அப்போது, கோலிவுட் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் திரையுலகை சார்ந்தவர் வெளியில் வர வேண்டும்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தெலுங்கு திரையுலகில் அனைத்து மொழிகளை சார்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். உதாரணத்துக்கு தமிழ்நாட்டை சார்ந்த சமுத்திரக்கனி தெலுங்கில் படம் இயக்குகிறார். ஆந்திராவை சார்ந்த ஏ.எம். ரத்தினம் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார் என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு தமிழ் திரையுலகில் சர்ச்சைகளை கிளப்பியது.
இந்நிலையில் பவன் கல்யாணின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவரான நாசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிறமொழி நடிகர் தமிழ் படங்களில் பணியாற்ற முடியாது என்று பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது. இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு நான் முதல் ஆளாக நான் எதிர்ப்பு தெரிவிப்பேன். தற்போது சர்வதேச அளவில் பான் இந்திய படங்களை நாம் எடுத்து கொண்டிருக்கிறோம்.
போடு வெடிய.. ‘மரகத நாணயம்’ பார்ட் 2 வருது: மாஸ் தகவலை வெளியிட்ட இயக்குனர்.!
இதற்காக பிறமொழிகளை சார்ந்த நடிகர், நடிகைகள் இங்கு நடிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே பிறமொழி கலைஞர்கள் தமிழில் பணியாற்றக்கூடாது என்று தீர்மானம் போட வாய்ப்பில்லை. தமிழ் படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டில் படங்களை எடுத்து இங்குள்ள தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு சினிமாவை நம்பிவுள்ள தொழிலாளர்களின் நலன் கருதியே இந்த தீர்மானங்கள் போடப்பட்டது.
பிற மொழிகளில் உள்ள திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் பெருமை மிகுந்த திரையுலகம் தான் தமிழ் சினிமா. வந்தாரை வாழ வைக்கு ஊர் இது. சாவித்திரி, வாணி ஜெயராம் போன்ற பலர் தமிழ் திரையுலகில் வந்து பிரபலமாகி உள்ளனர். இந்த தவறான தகவலை சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டாம். ஒன்றாக படங்கள் எடுப்போம். அதை உலகளவுக்கு எடுத்து செல்வோம். இவ்வாறு அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் நாசர்.
Gayathrie: காரிலே டிரெஸ் மாற்ற சொல்வாங்க: நடிகை காயத்ரி பகிர்ந்த ஷாக்கிங் தகவல்.!