வெற்றி கிடைக்கும் வரை என்எல்சிக்கு எதிரான போராட்டம் தொடரும்… ராமதாஸ் அதிரடி!

என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமகவினர் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து அன்புமணி கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை கலைக்க முயன்றதால் போராட்டம் கலவராமாக மாறியது.

காவல்துறை வாகனங்கள் மீதும் காவல்துறையினர் மீதும் பாமகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறையினர் 8 பேரின் மண்டை உடைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், காவல்துறையினர் மற்றும் காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் என்எல்சிக்கு எதிரான பாமகவின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் நிறுவனரான

தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பாமகவினர் மீது தடியடி நடத்தியதுதான் நிலைமை மோசமடைய காரணம் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் இந்த போராட்டம் என்எல்சி நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல, கடலூர் மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான போராட்டம் என்றும் இதில் வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பாமக அடக்குமுறைகளை பார்த்து வளர்ந்த கட்சி என்றும், கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்றவற்றின் மூலம் பாமகவை கட்டுப்படுத்த முடியாது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

என்எல்சி நிறுவனத்திற்காக வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும் என்றும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பாமக ஒரு போதும் பின்வாங்காது என்றும் உறுதியாக கூறியுள்ள ராமதாஸ் இறுதி வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.