சென்னை: நடிகர் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள போலா சங்கர் படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தை தெலுங்கில் மெகர் ரமேஷ் இயக்கியுள்ளார். சாஹர் மகதி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சிரஞ்சீவியின் போலா சங்கர் பட ட்ரெயிலர் வெளியீடு: நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிக் கூட்டணிகளில் இணைந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது மகன் ராம்சரணும் தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நிலையில், தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து ஹீரோவாக அதிரடி காட்டி வருகிறார் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 11ம் தேதி போலா சங்கர் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது போலா சங்கர் படம். தமிழில் சிவா இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியுள்ளது போலா சங்கர். இந்தப் படத்தில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில், தற்போது படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெயிலரை தெலுங்கின் முன்னணி நடிகரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் வெற்றிக்கும் படக்குழுவினருக்கும் அவர் தன்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மெகர் ரமேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு சாஹர் மகதி இசையமைத்துள்ளார். சிரஞ்சீவி படங்களுக்கே உரிய அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமான அளவில் இந்தப் படத்தில் உள்ளதை ட்ரெயிலர் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏகே எண்டர்டெயின்மென்ஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள போலா சங்கர் ரிலீசுக்கு முன்பாகவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தன்னுடைய படங்களில் இதை அதிகளவில் வைத்துவரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்தப் படத்திலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள் என அதிரடி காட்டியுள்ளார்.
முன்னதாக கடந்த 2015ம் ஆண்டில் வெளியான அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படம் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தது. அந்தப் படத்தின் ரீமேக்காக போலா சங்கர் படம் உருவாகியிருந்தாலும் சிரஞ்சீவியின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்துள்ளது. ரஜினியின் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளிலேயே சிரஞ்சீவியின் போலா சங்கர் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.