சென்னை: ஷங்கரின் பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் பரத்.
தொடர்ந்து காதல், செல்லமே, நேபாளி, வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பரத்தின் 50வது படமாக உருவான ‘லவ்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பரத், அவரது கேரியர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஜெயம் ரவியால் கேரியரே முடிந்துவிட்டது: பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ள ‘லவ்’ இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. பரத்துடன் வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் லவ் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பரத் தனது கேரியர் குறித்து மனம் திறந்துள்ளார்.
பாய்ஸ், காதல், வெயில், எம் மகன் என வெற்றிப் படங்களில் நடித்தும் பரத்தால் முன்னணி ஹீரோவாக வலம் வர முடியவில்லை. இதுகுறித்து பேசிய அவர், “தனது தோல்விக்கு நான் மட்டுமே காரணம்” என வெளிப்படையாகக் கூறியுள்ளார். முக்கியமாக நேபாளி படத்தில் நிறைய படுக்கையறை காட்சிகள் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அந்தப் படம் A சான்றிதழுடன் வெளியானது. அதன் காரணமாக ஃபேமிலி ஆடியன்ஸ் யாரும் நேபாளி படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார்.
அதேநேரம் ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் வெளியாகியிருந்தது. ஃபேமிலி சென்டிமெண்ட் படமான சந்தோஷ் சுப்ரமணியம், ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனால் நேபாளி படம் தோல்வியடைந்ததோடு, அதிலிருந்து தனது கேரியரும் சரியத் தொடங்கியதாக புலம்பித் தள்ளியுள்ளார். நேபாளி படத்தின் இயக்குநர் மீது இருந்த கோபத்தையும் அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படம் 2008ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியானது. அதே தேதியில் தான் பரத்தின் நேபாளி திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் அறிமுகமான பரத், 50 படங்கள் நடித்தும் முன்னணி ஹீரோவாக முடியாமல் திணறுவது இதனால் தானா என ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் பரத். இந்தப் படம் நிச்சயம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.