ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகை ஜெயசுதா பாஜகவில் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ஜெயசுதா 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜெயசுதா, அண்மையில் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படம் மட்டுமின்றி அரசியலிலும் ஜெயசுதா கவனம் செலுத்தி வருகிறார்.இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச […]
