Jailer trailer: ஜெயிலர் ரிலீஸ்..நெல்சன் எடுத்த அதிரடி முடிவு..இதுவும் நல்ல ஐடியா தான்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. என்னதான் ரஜினியின் முந்தைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ,நெல்சனின் கடைசி படமாக பீஸ்ட் சரியாக போகவில்லை என்றாலும் ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிரிபார்ப்பு இருந்து வருகின்றது.

இப்படத்தின் மூலம் இருவரும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் இருப்பதால் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்தனர். ஜெயிலர் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு மட்டும் ஆறு மாதம் எடுத்துக்கொண்டார் நெல்சன்.

ஜெயிலர் ப்ரோமோஷன்

பீஸ்ட் படத்தில் செய்த தவறை ஜெயிலர் படத்தில் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நெல்சன் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் பிசியாக இருக்கின்றார். இன்னும் படம் வெளியாக ஒரு வாரமே இருக்கும் நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றது.

Jailer: ஜெயிலர் படத்தின் எதிரொலி..கோலிவுட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..தலைவரின் தரமான சம்பவம்..!

படத்தின் கதையை சொல்லாமல் மேலோட்டமாக பல மாஸ் விஷயங்களை வைத்து ஜெயிலர் ட்ரைலரை நெல்சன் உருவாக்கியுள்ளார். இந்த ட்ரைலரை பார்க்கும்போது நெல்சனின் ஸ்டைலில் தான் ரஜினி நடித்துள்ளார் என்று தெரிகின்றது. சூப்பர்ஸ்டாருக்காக எந்த வித பாரபட்சமும் பார்க்காமல் நெல்சன் தன் ஸ்டைலில் ஜெயிலர் படத்தை எடுத்துள்ளார் என்ற கருத்தே ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

அந்த வகையில் ஜெயிலர் ட்ரைலரின் மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார் நெல்சன். இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன்ஸ் பற்றிய ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு விறுவிறுப்பாக செய்து வருகின்றது.

நெல்சன் எடுத்த முடிவு

இதைத்தொடர்ந்து ஜெயிலர் ப்ரோமோஷன்களுக்காக நெல்சன் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கவேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம். ஏனென்றால் பீஸ்ட் படத்தின் வெளியீட்டின் போது நெல்சன் கொடுத்த சில பேட்டிகள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இது படத்திற்கு நெகடிவான விஷயமாக மாறிவிட்டது. எனவே தான் ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன்களுக்காக நெல்சன் பேட்டி கொடுக்கவேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம். படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தான் பேட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.