Suriya: முதலில் பேசிய ஜோ.. அனைத்தையும் கொடுத்த படம்: 'காக்க காக்க' நினைவுகளை பகிர்ந்த சூர்யா.!

கெளதம் மேனன், சூர்யா கூட்டணியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ‘காக்க காக்க’. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஜோதிகா, டேனியல் பாலாஜி, ஜீவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

‘காக்க காக்க’ படத்தில் ஏபிசி அன்பு செல்வன் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் சூர்யா. வழக்கமான போலீஸ், வில்லன் படமாக இருந்தாலும் கெளதம் மேனனின் ஸ்டைலிஷான மேக்கிங்கால் வரவேற்பை பெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்த இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்தப்படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இன்றளவும் இடம்பெற்றுள்ளது. ‘காக்க காக்க’ படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தப்படத்தில் நடித்த சமயத்தில் தான் சூர்யா, ஜோதிகா இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

Jailer: ‘ஜெயிலர்’ டிரெய்லரில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதுதான்: டிரெண்டிங்கில் கலக்கும் தலைவர்.!

இந்நிலையில் இந்தப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்த படம்.

அன்புசெல்வன் எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பார். இந்தப்படம் பற்றி என்னிடம் முதலில் பேசிய ஜோதிகா, என் சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சக நடிகர்கள் நன்றி. ஏகப்பட்ட நல்ல நினைவுகள் என பதிவிட்டுள்ளார். ‘காக்க காக்க’ படம் தொடர்பான சூர்யாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

4 முறை தேசிய விருது வென்ற கலை இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.