மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணியில் தற்போது மூன்று இடம்தான் பேட்டிங்கில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கில் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் தங்களுடைய இடத்தை பிடித்துக் கொண்டுள்ளனர். […]
