"இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன்!"- `Kalki 2898 AD' அனுபவங்கள் பகிரும் பிரபாஸ்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் `கல்கி 2898 AD’.

இதில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் தமிழ் நடிகர்களான கமல்ஹாசன், பசுபதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் உருவாகிவரும் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டிருந்தது. ராஜமௌலி உள்ளிட்ட பலரும் வீடியோவைப் பார்த்தபின் படக்குழுவினருக்குப் பாராட்டினைத் தெரிவித்திருந்தனர்.

பிரபாஸ், தீபிகா படுகோன்

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பிரபாஸ், தீபிகா படுகோனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். “இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோன். அவர் ஏற்கனவே உலக அளவில் பிரபலமானவர். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் துடிப்போடு இருப்பார். எனக்கு அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று கூறியிருக்கிறார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.