STR 48: சிம்புவுக்காக களமிறங்கும் ஆண்டவர்.. முரட்டு சம்பவம்: எதிர்பாராத ட்விஸ்ட்.!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் மாஸ் காட்டி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.

‘மாநாடு’ படத்திற்கு முன்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக உடல் எடை எக்கச்சக்கமாக அதிகரித்த லுக்கில் இருந்தார். இதனிடையில் கொரோனா லாக்டவுனில் உடல் எடையை முழுவதுமாக குறைத்து மிரட்டலான லுக்கிற்கு மாறினார். அந்த எனர்ஜியுடன் ‘மாநாடு’ படத்தில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது இந்தப்படம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து தனது ஆஸ்தான இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார். இந்தப்படம் ஹிட்டடித்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ச்சியாக மூன்று ஹாட்ரிக் ஹிட் கொடுத்த பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் சிம்பு.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக
கமல்
தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ளதாக அதிரடியான அறிவிப்பு வெளியானது. ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானர். இவர் ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர்.

Rajinikanth: பட்டையை கிளப்ப போகும் ‘தலைவர் 170’: ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்.!

இந்தப்படத்திற்காக பெரும் தொகை பட்ஜெட்டிற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தில் கேமியோ ரோல் ஒன்றில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ள இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

அண்மையில் தான் பிரபாஸின் ‘புராஜெக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க கமல் ஒப்பந்தமான அறிவிப்பு வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர விட்டது. இந்நிலையில் தற்போது ‘எஸ்டிஆர் 48’ படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட் சினிமாவினர் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் இந்தப்படத்தில் சிம்பு ஹீரோ, வில்லனாக இரட்டை வேடங்களில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Jailer: பாட்ஷாவை விட டபுள் ஹிட்டடிக்கும்: ‘ஜெயிலர்’ டிரெய்லரை பார்த்து மெர்சலான பிரபல நடிகர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.