
வயதை வைத்து விமர்சித்தவர்களுக்கு பதிலளித்த தமன்னா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா. சமீபகாலத்தில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக பேசப்படும் நடிகையும் தமன்னா தான். வரும் வாரத்தில் ரஜினியுடன் தமன்னா நடித்த 'ஜெயிலர்' மற்றும் சிரஞ்சீவி உடன் நடித்த 'போலா சங்கர்' என இரண்டு படங்களும் ஒன்றாக வெளியாகும் மகிழ்ச்சியில் உள்ளார் தமன்னா.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எப்படி தமன்னா இரண்டு சீனியர் வயதான நடிகர்களோடு இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டார் என கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு இப்போது தமன்னா பதிலளித்துள்ளார். அதன்படி, ” சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இடையில் எதற்கு வயது வித்தியாசம் பார்க்கிறீர்கள். வெறும் கதாபாத்திரங்களாக மட்டும் பாருங்கள். வயது குறித்து பேச வேண்டுமானால் நான் டாம் க்ரூஸ் மாதிரி சாகசம் செய்வேன், நடனமும் ஆடுவேன் என்கிறார். திறமையான சீனியர் நடிகர்களுடன் இணைந்து நடிப்பது எப்போது எனக்கு மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.