வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜோத்பூர்: சமீப காலங்களில் இந்தியா -பாக்., இடையே எல்லை தாண்டிய திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இரு நாடுகளிடையே ஆன்லைனில் திருமணம் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
![]() |
சமூக வலைதளங்கள் மூலம் காதல் கொண்ட உ.பி., மாநிலத்தை சேர்ந்த சச்சின் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் இடையே நடந்த எல்லை கடந்த திருமணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ராஜஸ்தானை சேர்ந்த பெண்ணான அஞ்சு முறையான விசாவில் பாகிஸ்தானுக்குச் சென்று கைபர் பக்துன்வாவில் தனது பேஸ்புக் நண்பரான நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டார். இந்த இரு சம்பவங்கள் இருநாடுகளிடையே பேசும் பொருளானது. இந்த பரபரப்பு அடங்குவற்குள் மற்றொரு காதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த முறை ஆன்லைனில் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த பெண் அமீனா. இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அர்பாஸ் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இவர்களது திருமணம் இருப்பினும் அமீனா இந்தியா வருவதற்கான விசா கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இரு வீட்டாரும் ஆன்லைனில் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இரு வீட்டாரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பதால் ஆன்லைன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதற்கான மணமகனின் ஜோத்பூர் வீட்டில் உறவினர்கள் காணும் வகையில் பெரிய எல்.இ.டி டி.விக்களில் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
![]() |
மணமகனின் தந்தை முகமது அப்சல் கூறுகையில் மணமகளான அமீனாவிற்கு விசா கிடைத்தவுடன் அவர் இந்தியாவிற்கு வர உள்ளார். அங்குள்ள பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் ஜோத்பூரில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். எங்களுக்கும் அங்கே உறவினர்கள் இருக்கிறார்கள்.இந்தியாவின் திருமண சான்றிதழ் உடன் விசாவிற்கு விண்ணப்பித்தால் அது எளிதாகக் கிடைக்கும்,” அதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement