Rajinikanth: ஜெயிலர் படம் பார்த்துவிட்டு இமயமலைக்கு கிளம்பிய ரஜினி

ஒவ்வொரு பட ஷூட்டிங் முடிந்ததும் இமயமலைக்கு கிளம்பிவிடுவார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகு ஆண்டு தோறும் செல்லும் பழக்கம் மாறியது.

சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்ல
மேலும் துணைக்கு தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு இமயமலைக்கு செல்லாமல் இருந்தார் ரஜினி.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தற்போது 4 ஆண்டுகள் கழித்து தற்போது இமயமலைக்கு கிளம்பியிருக்கிறார். இம்முறை அவர் தனியாக செல்கிறார். துணைக்கு மகள் ஐஸ்வர்யா செல்லவில்லை.

இமயமலைக்கு கிளம்பும்போது காரில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசினார் ரஜினி. அப்பொழுது அவர் கூறியதாவது,

இமயமலைக்கு கிளம்புகிறேன். 4 ஆண்டுகள் கழித்து செல்கிறேன். கோவிட் வந்த பிறகு செல்ல முடியவில்லை என்றார்.

நேற்று முன்தினம் சன் டிவி அலுவலகத்தில் ரஜினிக்காக ஜெயிலர் படத்தை ஸ்பெஷலாக திரையிட்டார்கள். இதையடுத்து படம் பார்த்தீர்களே, ஜெயிலர் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என ரஜினியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என தன் அக்மார்க் சிரிப்பை சிரித்துவிட்டு கிளம்பினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. அதிகாலை காட்சிகள் இல்லாததால் 9 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது.

ஜெயிலர் படத்தை பார்க்கும் ஆசையில் ஆகஸ்ட் 10ம் தேதி காலை திடீரென்று பலரும் லீவு போடுவார்கள் என்பதால் சில நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து விடுமுறை அறிவித்துள்ளன. மேலும் தங்கள் ஊழியர்கள் மனம் மகிழும்படி ஜெயிலர் பட டிக்கெட்டுகளை இலவலசமாக கொடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளன.

சென்னை, மதுரை, நெல்லை, பெங்களூரில் உள்ள சில நிறுவனங்கள் தான் விடுப்பும் கொடுத்து, இலவச டிக்கெட்டும் கொடுத்துள்ளன. அதை பார்த்து பிற நிறுவன ஊழியர்கள் எல்லாம் ஏக்கப் பெருமூச்சுவிடுகிறார்கள்.

ஜெயிலர் படத்தின் ட்ரெய்லரை பார்த்த பிறகு அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது ரஜினிகாந்த் அல்ல நெல்சன் திலீப்குமார் ஸ்டைல் படம் தான். ஆனால் அவர் ஸ்டைலுக்கு ரஜினி ஃபிட்டாகியிருக்கிறார்.

ஜெயிலரில் மலையாள நடிகர் விநாயகன் தான் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். அநத் கதாபாத்திரத்தில் மம்மூட்டியை நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார் நெல்சன். இது தொடர்பாக ரஜினியும் மம்மூட்டியிடம் பேசியிருக்கிறார்.

Jailer: ஜெயிலர் விழாவில் ரஜினி சொன்ன அந்த ‘நண்பர்’, கமல் இல்ல மம்மூட்டி

ரஜினி படத்தில் நடிக்க மம்மூட்டியும் ஒப்புக் கொண்டார். ஆனால் படத்தில் நண்பர் மம்மூட்டியை அடிக்க ரஜினி விரும்பவில்லை. இதையடுத்தே விநாயகனை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

ரஜினியின் மகனாக வசந்த் ரவி நடித்துள்ளார். ட்ரெய்லரில் மகன் வசந்த் ரவியின் ஷூவை ரஜினி துடைத்ததை பார்த்த ரசிகர்கள் டென்ஷனாகிவிட்டார்கள். இதே சரத்பாபுவின் ஷூவை துடைத்திருந்தால் யாரும் கடுப்பாகியிருக்க மாட்டார்கள்.

சரத்பாபுவை தவிர வேறு யாராவது ரஜினியை அடித்தாலோ, ரஜினி அவர்களின் ஷூவை துடைத்தாலோ ரசிகர்களால் ஏற்க முடியவில்லை.

Jailer: பிஸ்லரி பாட்டிலில் ஜெயிலர்: வேற லெவல் ப்ரொமோஷனில் இறங்கிய சன் பிக்சர்ஸ்

இதற்கிடையே ஜெயிலர் படத்தை பிஸ்லரி பாட்டில் மூலம் விளம்பரம் செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். பிஸ்லரி பாட்டில்களில் ஜெயிலர் போஸ்டர் இருக்கிறது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.