Jailer: ரஜினியின் ஜெயிலரில் விஜய்யின் லியோ ப்ரொமோ: இதை சத்தியமா எதிர்பார்க்கல

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்க்கும் அனைவரும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தலைவர் ரஜினிகாந்தை வைத்து தரமான சம்பவம் செய்திருக்கிறீர்கள் நெல்சா.

தளபதிக்கு பெயர் மாற்றம் தான் செய்யனும்
வின்டேஜ் தலைவரை கொண்டு வந்ததற்கு நன்றி. அனிருத்தின் பிஜிஎம் மாஸாக இருக்கிறது. படம் பார்க்கும்போது புல்லரிக்கிறது. அந்த அளவுக்கு நன்றாக வந்திருக்கிறது என ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் இடைவேளையின்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ ப்ரொமோ வந்தது. விஜய் வந்து Bloody Sweet என்று சொன்னதை பார்த்த ரசிகர்களோ, இது தான் எங்க தலைவர் என தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் தலைப்பு தொடர்பாக விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலரில் லியோவை பார்த்த உடன் ரஜினியும், விஜய்யும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

ஜெயிலர் படத்தை பெரிதாக விளம்பரம் செய்யவில்லை இந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் என ரஜினி ரசிகர்களுக்கு வருத்தம் இருந்தது. பட ரிலீஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிஸ்லரி பாட்டில்களில் ஜெயிலர் போஸ்டரை வைத்ததை பார்த்த ரஜினி ரசிகர்களோ, அய்யோ இவ்வளவு சீக்கிரம் ப்ரொமோஷனை ஆரம்பித்திருக்கக் கூடாது என்று கிண்டல் செய்தார்கள்.

Jailer Twitter Review: கொல மாஸ், தீயா இருக்கு, கண்டிப்பா பிளாக்பஸ்டர் தான்: ஜெயிலர் ட்விட்டர் விமர்சனம்

இந்நிலையில் ஜெயிலரை சன் பிக்சர்ஸ் பெரிய அளவில் விளம்பரம் செய்யாததும் நல்லதாகிவிட்டது என்கிறார்கள். பெரிய அளவில் விளம்பரம் செய்து, ஹைப் கொடுத்தால் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிடும். அந்த எதிர்பார்ப்புடன் வந்து படம் பார்க்கும்போது படம் நன்றாகவே இருந்தாலும் ஏமாற்றம் அளிக்கும்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று படம் பார்த்தபோது மிகவும் திருப்தியாக இருக்கிறது. சன் பிக்சர்ஸை அவசரப்பட்டு கலாய்த்துவிட்டோம். அவர்கள் செய்ததும் ஒரு வகையில் நல்ல விஷயம் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சீண்டும் காக்கா, குரைக்கும் நாய் என ரஜினி சொன்னது விஜய்யை தான் என பேசப்பட்டது. அதன் பிறகே அவர் விஜய்யை விமர்சிக்கவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் ஜெயிலரில் லியோவை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள்.

இதற்கிடையே ரஜினி இமயமலைக்கு சென்றதும் நல்லதாகிவிட்டது. அவர் அங்கு பிரார்த்தனை செய்ய செய்ய இங்கு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களை பார்த்தால் திருவிழா நடக்கும் இடம் போன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.