
அசுர வளர்சி அடைந்த மிர்னா
கேரளாவை சேர்ந்த அதிதி மேனன் தமிழில் அறிமுகமாகி சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார். நடிகர் அபி சரவணன் உடன் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அபி சரவணனை பிரிந்த அதிதி மேனன் தனது பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மோகன்லாலுடன் 'பிக் பிரதர் 'படத்தில் நடித்த அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். 'புர்கா' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர் தனது இன்ஸ்டாகிராமில் “தலைவர் மற்றும் குழுவினருடன் இந்த ஒரு வருடம் என் வாழ்வின் சிறந்த நேரம். எல்லாம் ஒரு மனிதனுக்காக, லெஜண்ட், தலைவர், சூப்பர் ஸ்டார்” என்று எழுதியுள்ளார் மிர்னா.