காவிரி நீரை தர முடியாது.. ஒரே அடியாக மறுத்த சித்தராமையா: என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக விவசாயிகள் காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகளுக்கு போதிய நீர் சென்று சேரவில்லை. காவிரியில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டிய நீரை திறந்துவிடாமல் மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் காவிரி பாசனப் பரப்பில் உள்ள விவசாயிகள் பயிர்கள் கருகுவதை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழக நீர் வளத்துறை சார்பாக ஒன்றிய நீர்சக்தி துறை அமைச்சரை நேரடியாக இரு முறை சந்தித்து வலியுறுத்தினார் அமைச்சர் துரைமுருகன்.

எடப்பாடியுடன் டீல் பேசும் சசிகலா? தினகரன், ஓபிஎஸ் பிளான் என்ன? நான்கு மாதங்களில் நடக்கும் மாற்றம்!

நேற்று காவிரி மேலாண்மை கூட்டத்திலும் கர்நாடக அரசு நீரை திறந்துவிட மறுப்பு தெரிவித்ததால் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் காவிரி நீரை தராவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரியில் வினாடிக்கு 10,000 கன அடி நீரை 15 நாள்களுக்கு திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே ஆணை பிறப்பித்தது. ஆணைய உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றுகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்கிறோம் என்று தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை. கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. அதனால் தமிழகத்துக்கு தண்ணீரை திறக்க இயலவில்லை” என்று மைசூரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

காவிரி நீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடகாவால் தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவில்லை. தற்போது கர்நாடக முதல்வரே நீர் திறக்க இயலவில்லை என்று கூறிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் என்ன எதிர்வினை ஆற்ற உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.