புதுடெல்லி: ஹரியாணா மாநில பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் சுதிர் பர்மர். இவர், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிபதி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குருகிராமில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து சுதிர் பர்மரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) நீதிபதி சுதிர் பர்மரை கைது செய்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தன.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என அமலாக்கத் துறை தெரி வித்துள்ளது.