Jailer: சென்சாரில் நீக்கப்பட்ட ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி..செம மாஸா இருந்திருக்குமே..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். என்னதான் ஒரு சில குறைகள் ஜெயிலர் படத்தில் இருப்பதாக சிலர் கூறினாலும் பெரும்பாலான ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய ரஜினியை ஜெயிலர் படத்தின் மூலம் நெல்சன் கொண்டுவந்துள்ளார் என அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக ஜெயிலர் திரைப்படம் அமைந்துள்ளதால் அனைத்து விதமான ரசிகர்களையும் இப்படம் ஈர்த்துள்ளது.

ஜெயிலர் கிளைமாக்ஸ்

நெல்சனின் டார்க் காமெடி ஒருபக்கம், ரஜினியின் ஸ்டைல் மறுபக்கம் என இப்படம் சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியான நாளில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

Nelson: விருது விழாவில் அவமானமா ? நடந்தது என்ன ? வெளிப்படையாக பேசிய நெல்சன்..!

படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பின் காரணமாக முன்பதிவு அமோகமாக இருந்த நிலையில் தற்போது ஜெயிலர் பாசிட்டிவான டாக் பெற்று வருவதால் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் வெளியான இரண்டே நாட்களில் நூறு கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இப்படத்தில் பல மாஸான காட்சிகள் இருப்பதால் ரசிகர்கள் பலமுறை இப்படத்தை திரையில் வந்து பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி, மோகன்லால், ஷிவ்ராஜ்குமார் மிரட்டிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

அக்காட்சியை காணவே ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரைக்கு வருவார்கள் என்பது மட்டும் உறுதி. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்சார் நீக்கிவிட்டதாகவும், அக்காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் இப்படத்தின் எடிட்டர் நிர்மல் கூறியுள்ளார்.

நீக்கிய சென்சார்

அவர் கூறியதாவது, ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸ் பிறகு ஒரு காட்சி வரும். அது செம மாஸாக இருக்கும். ஆனால் சென்சாரில் அந்த காட்சியை நீக்கிவிட்டனர். அந்த காட்சி மட்டும் இருந்திருந்தால் செம மாஸாக இருந்திருக்கும் என கூறினார் நிர்மல். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் சில காட்சிகள் ஓவர் வன்முறையாக இருப்பதாக ஒரு சிலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இருந்தாலும் அந்த காட்சிகள் இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. இதைப்போல ஒவ்வொரு விதமான ரசிகர்களும் ரசிக்கும்படி ஜெயிலர் படத்தில் பல விஷயங்கள் இருப்பதால் தான் இப்படம் தற்போது வசூல் சாதனை செய்து வருவதாக விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து இனி வரும் நாட்களில் ஜெயிலர் திரைப்படம் மேலும் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.