சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என சித்ராவின் தந்தை மனு அளித்துள்ளார். கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சின்னத்திரை நடிகை சித்ரா திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். நடிகை சித்ராவைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று […]
