காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம்

குடகு :-

காபி தோட்ட தொழிலாளி

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா நாபொக்லு அருகே காக்கப்பே நாலடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்தவர் அனு சுப்பையா (வயது 50). காபி தோட்ட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வனப்பகுதியையொட்டி உள்ள காபி தோட்டத்துக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி காபி தோட்டத்துக்குள் புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனு சுப்பையா, அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

காட்டு யானை தாக்கி படுகாயம்

ஆனாலும் காட்டு யானை தும்பிக்கையால் அவரை தூக்கி வீசியது. பின்னர் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. காட்டு தாக்கியதில் அனு சுப்பையா பலத்த காயம் அடைந்தார்.

இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்த விவசாயிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதி மக்கள் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்ற வனத்துறையினர், காட்டு யானையின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.