OnePlus Ace 2 Pro-ன் அதிநவீன ப்ராசஸர் மற்றும் சிறப்பம்சங்கள்! லேப்டாப் ரேஞ்சுக்கு ஸ்டோரேஜ் வசதியும் இருக்கு!

Qualcomm-ன் அதிநவீன ப்ராசஸர், உயர்ரக கேமராக்கள், நீடித்து உழைக்கும் பேட்டரி என எண்ணற்ற சிறப்பம்சங்களோடு OnePlus Ace 2 Pro மொபைல் கடந்த புதன்கிழமை சீனாவில் வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தொழிநுட்பங்கள், விலை விவரம் ஆகிய விவரங்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ப்ராசஸர்PC : OnePlus
OnePlus Ace 2 Pro மாடல் மொபைலில் Qualcomm-ன் அதிநவீன ப்ராசஸரான Snapdragon 8 Gen 2 SoC பொருத்தப்பட்டுள்ளது. மேலும் LPDDR5X 24GB ரேம் உடன் இது வழங்கப்பட்டுள்ளது.

கேமராPC : OnePlus
பின் பக்க கேமராவில் Sony IMX890 சென்சாருடன் கூடிய 50-மெகாபிக்ஸல் பிரைமரி ரியர் கேமரா, IMX355 சென்சாருடன் கூடிய 8 மெகாபிக்ஸல் கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது மேலும், முன்பக்கம் சிறந்த செல்ஃபீ மற்றும் வீடியோ கால் அனுபவத்திற்காக Samsung S5K3P9 சென்ஸார்களோடு கூடிய 16 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
டிஸ்பிளேPC : OnePlus
6.74-inch Full HD , AMOLED screen டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் , ஒரு இன்ச்சில் 450 பிக்ஸல் என்ற அளவில் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் பொறுத்தப்பட்டுள்ள அதிநவீன வாட்டர்ப்ரூஃப் டெக்னாலஜி மூலம் இது மழை நீர் பட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்படும் மொபைல் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேட்டரிPC : OnePlusநாள் முழுவதும் நீடித்து உழைப்பதற்கு ஏற்ற வகையில் 5,000mAh திறன் கொண்ட பேட்டரி OnePlus Ace 2 Proவில் பொறுத்தப்பட்டுள்ளது. சார்ஜ் தீர்ந்து போனாலும் பரவாயில்லை. இதில் வழங்கப்பட்டுள்ள 150W Super Vooc டெக்னாலஜி மூலம் 17 நிமிடங்களில் சார்ஜ் ஏறி விடும்.
ஸ்டோரேஜ் வசதிPC : OnePlus
இதன் ஸ்டோரேஜ் வசதி 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜில் துவங்கி 24GB ரேம் மற்றும் 1TB வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
​விலை விவரம்PC : OnePlus
OnePlus Ace 2 Pro மொபைல் இந்திய விலையின் படி 34,600 முதல் துவங்கி 46,100 ரூபாய் வரை விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.