"ஆஹா.. இது அதுல்ல".. உதயநிதி பாணியில் அண்ணாமலை.. 'அதென்ன கையில'.. மிரண்டு போன திமுக!

நெல்லை:

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனையை கிண்டல் செய்வதற்காக செங்கல்லை தூக்கி காட்டியது போல, அண்ணாமலையும் தான் செல்லும் இடங்களில் எல்லாம் செங்கல்லை தூக்கிக்கொண்டு சுற்றி வருகிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு முதன்முதலாக தேர்தல் களத்தை சந்தித்தாலும், உதயநிதி ஸ்டாலினின் தனி பாணி மக்கள் அனைவரையும் ஈர்த்தது. அடுக்கு மொழியாகவும், அலங்கார பேச்சாகவும் இல்லாமல் தனது எதார்த்தமான பேச்சால் உதயநிதி ஸ்டாலின் மீது மக்களின் கவனம் குவிந்தது. அவரது பிரச்சாரத்தின் ஹைலைட்டாக அமைந்தது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பானது தான்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதுடன் அதை கண்டுகொள்ளாமல் விட்ட மத்திய அரசை கிண்டல் செய்யும் வகையில், ஒரு செங்கல்லை எடுத்து அதில் எய்மஸ் என எழுதி, “நல்லா பார்த்துக்கோங்க.. இதுதான் மத்திய அரசு கட்டியுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை” என உதயநிதி ஸ்டாலின் பேசியது அன்றைக்கு மக்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த சூழலில், தற்போது பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அதே செங்கல் பாணி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார். நெல்லையில் இன்று பாதயாத்திரை சென்ற அண்ணாமலை திடீரென தன் கையில் ஒரு செங்கல்லை எடுத்தார். “நல்லா பாத்துக்கோங்க.. இதுதான் முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலியில் கட்டுவதாக சொன்ன சித்த மருத்துவப் பல்கலைக்கழகம். எப்படி கட்டிருக்காங்கனு பாருங்க..” என அண்ணாமலை பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.