நீட் எதிர்ப்பு போராட்டம்: போஸ்ட் மேன் வேலை பார்க்கும் ஆளுநர் – போட்டுத் தாக்கும் ஸ்டாலின்

சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மதுரை தவிர பிற ஊர்களில் நீட் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தில் ஒவ்வொரு நகரங்களிலும் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசின் ஆலோசனையைப் பெற்ற பிறகு குடியரசுத் தலைவர்தான் நீட் விலக்குக்கு ஒப்புதல் தரவேண்டும். ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா நகரில் திமுக மேற்கு மாவட்ட பகுதி செயலாளர் ராமலிங்கம் இல்ல திருமண விழாவில் இன்று (ஆக.20) தமிழக முதல்வர்

கலந்துகொண்டார்.

நீட் எதிர்ப்பு மசோதா குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் தற்போது அதில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இல்லை குடியரசு தலைவரிடம் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

“திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்துக்கு நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தோம். அனைத்து கட்சிகளும் ஆதரித்தது. மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். ஏற்கெனவே இருந்த ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை. அதன்பிறகு ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வைத்தோம்.

தென்காசியில் திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து

தற்போது இருக்கும் ஆளுநருக்கும் அனுப்பிவைத்தோம். அவர் அனுப்பாமல் ராஜ்பவனில் வைத்திருந்தார். ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளித்து மீண்டும் அவருக்கு அனுப்பினோம்.

இரண்டாவது முறையாக அனுப்பிய பிறகு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது அது குடியரசுத் தலைவரிடம் உள்ளது. எனவே, அதை குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் ஆலோசனையைப் பெற்ற பிறகு அவர் இதற்கு ஒப்புதல் தரவேண்டும்.

ஆளுநருக்கு இதில் எந்த அதிகாரமும் கிடையாது. எனக்கு அதிகாரம் இருந்தால் நான் ஒப்புதல் கொடுக்கமாட்டேன் என்று ஆளுநர் சமீபத்தில் கூறியுள்ளார். இதையெல்லாம் கண்டித்துதான் நீட் விலக்கு கோரிதான் இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது” என்று அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.