சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் குண்டு வீச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரியல் மற்றும் பொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் குண்டு வீச்சு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ளது குருநானக் கல்லூரி. மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிலருக்குள், தங்களுக்குள் யார் பெரியவர் என்ற ரீதியில் மோதல் நீடித்து வந்ததாக […]
