ச்சே ரஜினி மேல எவ்ளோ மரியாத வச்சிருந்தோம்.. அவரு மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தா? – ஒரே போடாக போட்ட திருமாவளவன்

ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை கடுமையாக விமர்சித்த , மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

நடிகர் ரஜினிகாந்த் இயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட நிலையில், வட இந்திய கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை அடைந்த ரஜினிகாந்த், அங்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை சந்தித்தார். காரில் இருந்து கீழே இறங்கியதும் வீட்டு வாசலில் வரவேற்க நின்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் ரஜினிகாந்த். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் யோகி ஆதித்யநாத்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட ரஜினி காலில் விழுந்த விவகாரம் விவாதமாக மாறியது. 72 வயதான ரஜினி தன்னை விட 21 வயது இளையவரான யோகி ஆதித்யநாத் காலில் விழலாமா என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், யோகி ஆதித்யநாத் முதல்வர் என்பதைத் தாண்டி ஒரு மடத்தின் தலைவர், சன்னியாசி என்ற அடிப்படையில்தான் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் என்றும் சிலர் கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த நிலையில் மாணவன் சின்னதுரை மீதான தாக்குதலை கண்டித்து நெல்லையில்

சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்ததை கடுமையாக விமர்சித்தார்.

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்

நிகழ்வில் திருமாவளவன் பேசும்போது, “உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் காலில் போய் நம்முடைய சூப்பர் ஸ்டார் விழுந்துவிட்டு வருகிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால், அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருந்தால் யோகி ஆதித்யநாத் அல்லவா முதலமைச்சர் ஆனது போல ஆகியிருக்கும் தமிழ்நாடு. இது எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கிறது.

தமிழக மக்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்பை ரஜினிகாந்த் மீது வைத்திருந்தோம். முதல்வரை சந்திப்பதோ, தலைவர்களை சந்திப்பதோ பிரச்னை அல்ல. ஆனால் ரஜினி காலடியில் விழுந்து வணங்குகிறார். அதற்கு என்ன பொருள். ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தை உயர்வாக மதிக்கட்டும். அது உங்களுக்குள் இருக்கும் உறவு. ஆனால், உங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு உயர்வாய் மதித்துக் கொண்டிருந்தார்கள்..?

தனக்கு எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை ரஜினி ஒரே நிகழ்வில் காட்டிவிட்டார். இப்படிப்பட்டவர்கள் கைகளில்தான் தமிழ்நாடு இன்று உள்ளது. இவர்கள்தான் கருத்துருவாக்கம் செய்யும் இடங்களில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையே நாம் காக்க வேண்டும். இதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றி அவசியமாக இருக்கிறது” என்று கூறி முடித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.