மகளிர் உரிமைத் தொகை: வடிகட்டப்படும் 55 லட்சம் பேர் – தகுதி வாய்ந்தவர்களை தொடர்பு கொள்ளும் அதிகாரிகள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஏதுவாக இரண்டு கட்ட முகாம்கள் ஜூலை 24ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றன. அதன் பின்னர் கடந்த மூன்று நாள்கள் சிறப்பு முகாமும் நடந்து முடிந்துள்ளது. இதுவரை சுமார் 1 கோடியே 55 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை – நிராகரிக்கப்படும் 55 லட்சம் பேர்!செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்க உள்ள நிலையில் விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதி வாய்ந்த ஒரு கோடி பேரை கண்டறிந்து பயனாளர்களாக அறிவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.1.55 கோடி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதால். சுமார் 55 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட உள்ளன. எதிர்பார்த்த அளவு விண்ணப்பங்கள் வந்துள்ளதால் மீண்டும் முகாம் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தகுதி வாய்ந்த யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதால் விண்ணப்பங்களை மறுக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை – தகுதிகள்!ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக இருப்பவர்கள், அரசு ஊதியம், ஓய்வூதியம் பெறாதவர்கள், ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள், ஐந்து ஏக்கருக்கு குறைவாக புன்செய், நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற தகுதியானவர்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தகுதி வாய்ந்தோர் விடுபட்டுவிடக்கூடாது!அரசு நிர்ணயித்த பொருளாதார தகுதிகளுக்கு வருபவர்கள் ஒருவர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை ஏற்கெனவே வலியுறுத்தி பேசியிருந்தார். அதேபோல் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் இதை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு!​​
தகுதிவாய்ந்தவர்கள் யாருக்கேனும் ஏதேனும் ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அதை பெறுவதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்று முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலில் வரக்கூடிய விண்ணப்பதாரர்கள் சிலர் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.